Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஒரே நாலெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் 303 பேர் உயிரிழப்பு !


லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய மிக உக்கிரமான வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் 303 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் லெபனான் வரலாற்றில் ஒரு கருந்தினமாக மாறியுள்ளதுடன், நாட்டின் சுகாதாரத் துறையையும் பெரிதும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமையன்று வெறும் 10 நிமிட இடைவெளியில் லெபனான் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லெபனான் சுகாதார அமைச்சகத்தின் முதற்கட்ட தகவலின்படி, 303 பேர் உயிரிழந்ததுடன் 1,150 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 110க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழக மருத்துவமனை காயமடைந்தவர்களின் முக்கிய சிகிச்சை மையமாக மாறியுள்ளது.

மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், ஒரே நேரத்தில் அதிகமான காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவமனைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளன.

சிதைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாலும், வெடிப்பின் அதிர்வாலும் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்கள் எந்தவொரு குறிப்பிட்ட குழுவையும் இலக்கு வைக்காமல் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட “சீரற்ற தாக்குதல்” என மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டு பெய்ரூட் துறைமுக வெடிப்பில் உயிரிழந்த 218 பேரை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் இதை “ஒரு கொடூரமான நிலைமை” என விவரித்துள்ளது. தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தால் மருத்துவ உதவிகள் வழங்குவது கடினமாகும் என மருத்துவத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...