போர் நிறுத்தம் ஏற்பட்டது முதல் ஆறு மாதங்கள் கடந்தும், காசா பகுதிக்குள் அத்தியாவசிய மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தத் தடையால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் கடுமையான மருந்துத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகின்றன. தேவையான மருந்துகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை கையிருப்பில் இல்லை. குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளில் 64 சதவீதம் முற்றிலும் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் அரைபங்கு இன்னும் சேவைகளை மீண்டும் தொடங்கவில்லை. தற்போது முழுமையாக இயங்கும் நிலையில் ஒரு மருத்துவமனையும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உதிரிப்பாகங்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், மருத்துவமனைகளில் உள்ள 90 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன.
சுமார் 18,500க்கும் மேற்பட்ட கடுமையான நோயாளிகள், இதில் 4,000 சிறுவர்கள் உட்பட, அவசர மருத்துவ வெளியேற்ற சிகிச்சைகளை தேவைப்படுகின்றனர். ஆனால், அதற்கான அனுமதிகள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
இந்த நிலைமை தொடர்ந்தால், காசாவின் சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலையும் அபாயத்தில் உள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.






3 Comments