அமெரிக்காவும் இஸ்ரேலும் எவ்வித அழுத்தம் கொடுத்தாலும், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் ஒருபோதும் நிறுத்தப்படாது என ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார்.
ஈரானின் செறிவூட்டல் திட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிரிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் “நடைமுறைக்கு வராத கனவுகள் மட்டுமே” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எந்தவித பலனும் அளிக்கவில்லை என்றும், தற்போது பேச்சுவார்த்தைகளின் போது ஈரானிடமிருந்து சலுகைகளைப் பெற முயற்சிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்து, ஈரானின் அணு திட்டம் குறித்து தொடர்ந்தும் நிலவி வரும் சர்வதேச பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.






3 Comments