Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஆர்டெமிஸ் II வெற்றி: நிலவைச் சுற்றிய பயணத்திலிருந்து பாதுகாப்பாக திரும்பிய ஓரியன் !

நாசா மேற்கொண்ட ஆர்டெமிஸ் II பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த மிஷனில் பயன்படுத்தப்பட்ட ஓரியன் விண்கலம், 10 நாள் வரலாற்றுப் பயணத்தை முடித்து பசிபிக் கடல் பகுதியில், சான் டியாகோ கடற்கரைக்கு அருகில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இலங்கை நேரப்படி அதிகாலை இந்த இறக்கம் இடம்பெற்றது. வளிமண்டலத்திற்குள் நுழைந்தபோது சுமார் 6 நிமிடங்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் பாராசூட்டுகளின் உதவியுடன் விண்கலம் மெதுவாக கடலில் இறங்கியது.

அமெரிக்க கடற்படையின் USS John P. Murtha கப்பலும் மீட்புக் குழுவும் முன்கூட்டியே தயார் நிலையில் இருந்து, விண்வெளி வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெரமி ஹான்சன் ஆகியோரை பாதுகாப்பாக மீட்டனர்.

இந்த மிஷன் பல முக்கிய சாதனைகளை பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 6 அன்று, ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து சுமார் 406,771 கிலோமீட்டர் தூரத்தை எட்டியது. இதன் மூலம், அப்பல்லோ 13 சாதனையை முறியடித்து, மனிதர்கள் பயணித்த மிக நீண்ட தூரமாக புதிய உலக சாதனை உருவானது.

மேலும், 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக மனிதர்கள் நிலவைச் சுற்றி பயணித்த மிஷன் இதுவாகும். இந்த பயணத்தின் போது நிலவின் மேற்பரப்பு ஆய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால நிலவுத் தளம் மற்றும் செவ்வாய் பயணங்களுக்கு தேவையான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வெற்றி, 2028 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ் III மிஷனுக்கு முக்கிய அடித்தளமாகக் கருதப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...