ஈரான் போர்ச் சூழ்நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் வைத்த கண்ணிவெடிகளை முழுமையாக அகற்ற முடியாததால், அந்த முக்கிய கடல் வழித்தடத்தை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாக மீண்டும் திறக்க முடியவில்லை என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20–25 சதவீதம் கடந்து செல்லும் இந்த வழித்தடம், ஈரானின் நடவடிக்கைகளால் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பின்னர், ஈரான் சிறிய படகுகள் மூலம் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அமைத்ததாக கூறப்படுகிறது. சில கண்ணிவெடிகள் மிதக்கும் அல்லது நகரக்கூடிய வகையில் இருப்பதால் அவற்றை கண்டறிவது கடினமாக உள்ளது என அறிக்கை கூறுகிறது.
இந்த நிலைமை காரணமாக, கப்பல்கள் மாற்று பாதைகளை பயன்படுத்த வேண்டும் என ஈரான் அறிவித்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் கடல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியை விரைவாக மீண்டும் திறக்க வேண்டும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் வழித்தடம் உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த நிலைமை உலகளாவிய எண்ணெய் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.






3 Comments