ரஷ்யா–உக்ரைன் போரில் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இறுதி வரை சுமார் 32 மணி நேரத்திற்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் மற்றும் இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, ஈஸ்டர் போர் நிறுத்தத்திற்கு தங்கள் நாடு ஏற்கனவே தயாராக இருப்பதாகவும், அதேசமயம் எந்தத் தாக்குதலுக்கும் பதிலடி அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தலைமையிலான இராஜதந்திர முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட புதிய மோதல்கள் காரணமாக அவை தடையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பே உக்ரைனின் ஒடேசா, போல்டாவா மற்றும் சுமி பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






3 Comments