பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற பல மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இதை உறுதிப்படுத்தினார். பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளை ஏற்க ஈரான் தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது “இறுதி மற்றும் சிறந்த” பரிந்துரையை முன்வைத்திருந்தாலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டது. கடந்த 21 மணிநேரத்தில் டொனால்ட் ட்ரம்ப் உடன் பலமுறை ஆலோசனை நடத்தியதாகவும் வேன்ஸ் குறிப்பிட்டார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்பதற்கான உறுதியான உத்தரவாதத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. நீண்டகால அடிப்படையில் அணு ஆயுத திட்டத்தை கைவிடச் செய்வதே ட்ரம்பின் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்கா நெகிழ்வாக அணுகியபோதிலும், தங்கள் நிபந்தனைகளை ஏற்க ஈரான் தயங்குவதாக ஜே.டி. வேன்ஸ் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.






3 Comments