Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

லெபனான்–இஸ்ரேல் பேச்சுவார்த்தை முயற்சிக்கு உள்நாட்டில் எதிர்ப்பு !

லெபனான் அரசாங்கம் இஸ்ரேல் உடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த முயன்ற நிலையில், அதற்கு நாட்டிற்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த லெபனான் பிரதமர் நவாப் சலாம், நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையை காரணமாகக் கொண்டு தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபீ பெர்ரி, இஸ்ரேல் தாக்குதல்கள் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், முதலில் முறையான போர் நிறுத்தம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தலைநகர் பெய்ரூட்டில் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் உள்நாட்டு அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆனால், ஹெஸ்புல்லா மற்றும் அதன் கூட்டணி அமைப்பான அமல் இயக்கம், தற்போது மக்கள் வீதிகளில் போராடுவதைத் தவிர்க்குமாறு தங்கள் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளன. காரணமாக, நிலைமையை இஸ்ரேல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்க அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மத்தியில், லெபனானில் ஏற்பட்டுள்ள இந்த உள்நாட்டு பதற்றம் ஒரு புதிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...