Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் கிரீன்லாந்து குறித்து ட்ரம்ப் அதிரடி கருத்து !

ஈரானுடன் நடந்த மோதலின் போது ஐரோப்பிய நட்பு நாடுகள் போதிய ஆதரவு வழங்காததை காரணமாகக் காட்டி, கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க வேண்டும் என்ற தனது முன்பிருந்த நிலைப்பாட்டை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார்.

பனிக்கட்டிகள் நிறைந்த கிரீன்லாந்துக்கும் ஈரானுக்கும் நேரடி தொடர்பு இல்லாதபோதிலும், தற்போதைய உலக புவிசார் அரசியல் சூழலில் கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்புக்கு அவசியம் என அவர் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட சில நேட்டோ நாடுகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், சில நாடுகள் அமெரிக்க போர் விமானங்களுக்கு தங்கள் வான்வெளி மற்றும் தளங்களை பயன்படுத்த அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் ட்ரம்ப், “நமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் நேட்டோ நாடுகள் உடன் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், கிரீன்லாந்து போன்ற முக்கியமான பிரதேசத்தை கட்டுப்படுத்துவது வட அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என அவர் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தல் காரணமாக இந்த விவகாரத்தில் உடனடி தீர்மானங்கள் எடுக்கப்படுவது சாத்தியமில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நேட்டோ அமைப்பு 77 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் எதிர்கால பங்கு மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கை குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...