ஈரான் மீதான கடல்சார் கட்டுப்பாடு (Blockade) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி ஈரானியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து அரபிக் கடலுக்குள் நுழைந்துள்ளதாக ‘MarineTraffic’ தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அறிவிப்பின்படி இந்த கடல்சார் கட்டுப்பாடு இன்று (13) மத்திய அமெரிக்க நேரப்படி காலை 10 மணி முதல் அமுலுக்கு வருகிறது.
இந்த நடவடிக்கையின் கீழ், ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கப்பல்களும் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த வகை இராணுவ முற்றுகை சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறக்கூடும் என சட்ட நிபுணர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். மேலும், ஏற்கனவே நிலவிய போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் இந்த நடவடிக்கை முரண்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அண்மைய தரவுகளின்படி, போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்பு போர் காலத்தில் தினமும் சுமார் 138 கப்பல்கள் சென்ற நிலையில், தற்போது அதைவிட குறைந்தாலும் தொடர்ச்சியான போக்குவரத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அமெரிக்காவின் புதிய அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.






3 Comments