அமெரிக்காவும் ஈரானும் பாகிஸ்தானில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு “அங்குல தூரத்தில்” இருந்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் அமெரிக்கா அதிகபட்ச அழுத்தம்”, கோரிக்கைகளை மாற்றுதல் மற்றும் கடல் முற்றுகை போன்ற கடுமையான நிலைப்பாடுகளை எடுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்து, கடும் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார். குறிப்பாக எரிசக்தி சந்தையில் விலை உயர்வு ஏற்படலாம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டுப்பாடு விதிப்பதாக அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலாக ஈரான் கடற்படை படைகள், நீர்வழிப்பாதையை அணுகும் எந்தவொரு இராணுவக் கப்பல்களும் கடுமையாக கையாளப்படும் என எச்சரித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழியாக இருப்பதால், இந்த பரஸ்பர எச்சரிக்கைகள் சர்வதேச எரிசக்தி சந்தையிலும் பிராந்திய பாதுகாப்பிலும் அதிக பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
இதற்கிடையில் இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.






3 Comments