உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஈரான் தொடர்பான பதற்ற நிலையை முன்னிட்டு, போர்களை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என போப் லியோ வலியுறுத்தியிருந்தார். மேலும், ஈரானுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், போப் லியோவின் தெரிவை விமர்சித்ததுடன், அவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்பினார் நான் வெள்ளை மாளிகையில் இல்லையென்றால் அவர் வத்திக்கானில் இருக்க மாட்டார்” எனவும், குற்றச்செயல்கள் மற்றும் அணு ஆயுத விவகாரங்களில் போப் பலவீனமாக உள்ளார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், போப் அரசியல் சார்புடன் செயல்படாமல், கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்ற வகையில் தனது கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், Truth Social தளத்தில் ட்ரம்ப் தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரித்து ஆசீர்வதிப்பது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவியதுடன், பலரும் அதனை கேலியுடன் விமர்சித்து வருகின்றனர். சிலர் இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ட்ரம்பின் செயல்பாடு பொறுப்பற்றதாகவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.






3 Comments