டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ‘நாரி சக்தி வந்தன் சம்மேளனம்’ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் அவர் கூறியதாவது: இந்தியா தனது வளர்ச்சி பயணத்தில் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றை எடுக்க உள்ளது. இது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முடிவு பெண்களின் அதிகாரம் மற்றும் பங்களிப்பை மையமாகக் கொண்டதாகவும், மகளிர் சக்தி வந்தன் நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் பிரதிநிதித்துவம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தக் கருத்துகள், மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மற்றும் அதன் செயல்படுத்தல் தொடர்பான அரசியல் விவாதங்கள் தீவிரமாக உள்ள சூழலில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






3 Comments