Iran தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை United States க்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்துள்ளது.
ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Saeed Khatibzadeh, இந்தக் கோரிக்கை ஏற்க முடியாதது என்றும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஈரானின் அணுசக்தி தொடர்பான பொருட்களை அமெரிக்கா பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த காதிப்சாதே, எந்தவொரு செறிவூட்டப்பட்ட அணு மூலப்பொருளும் அமெரிக்காவிற்கு அனுப்பப்படாது என்றும், ஒருதலைப்பட்சமான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமற்ற நிபந்தனைகளை ஈரான் ஒருபோதும் ஏற்காது என்றும் கூறினார்.
மேலும் அமெரிக்கா தனது அதிகபட்சக் கோரிக்கைகளை தொடர்ந்தும் முன்வைத்தால் இரு நாடுகளுக்கிடையேயான புதிய நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.






3 Comments