காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு மற்றும் வானிலை கண்காணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்படும் ஜி-20 செயற்கைக்கோள் 2027ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் இஸ்ரோ முன்னிலை வகிப்பதாகவும் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய சாதனையை இந்தியா பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டமான ககன்யான் 4 மூலம் மனிதர்களை நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பும் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2040ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்களை தரையிறக்கி பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது இஸ்ரோவின் நீண்டகால இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆழ்கடல் ஆய்வுக்காக சமுத்ராயன் திட்டத்தின் கீழ் டைட்டானியம் கலன் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது இதுவரை 34 நாடுகளைச் சேர்ந்த 433 வணிக செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் ஏவியுள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.






3 Comments