ஈரான் நாட்டில் நீடித்துவரும் போர் பதற்றத்தையடுத்து கடந்த ஏழு வாரங்களாக மூடப்பட்டிருந்த வான்வழி, தற்போது பகுதியளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசுக்கு சொந்தமான ஈரான் நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, கிழக்கு ஈரானின் வான்வழிப் பாதைகள் நேற்று காலை 7 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது.
நாட்டின் விமான நிலையங்களில் விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், முழுமையான சேவை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறித்து காலக்கெடு குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக, பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர், ஈரானின் வான்வழி முழுமையாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஈரான்–அமெரிக்கா இடையிலான போர்நிறுத்தம் அமலுக்கு வந்து ஒரு வாரத்திற்கும் மேலான காலம் கடந்த நிலையில், இந்த பகுதியளவு வான்வழி திறப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






3 Comments