88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ், நேற்று முன்தினம் 21ம் தேதி Â உயிரிழந்துள்ளார்.
இவரின் இறப்பினைத் Â தொடர்ந்து அடுத்த போப் யார் என்ற கேள்வியே மக்களிடையே எழுந்துள்ளது.
இந்தநிலையில், வத்திகானுடைய நடைமுறைபடி போப்பினுடைய இறப்பை உறுதி செய்யும் அவருடைய நிதி செயலாளர், 3 முறை அவருடைய ஞானஸ்தானம் பெறும் பெயரை அழைப்பாராம்.
அந்த 3 முறைக்கும் பதிலில்லாத Â போதே அவரின் இறப்பு உலகிற்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
1963ஆம் ஆண்டுவரை இறந்த போப்பினுடைய நெற்றியில் வெள்ளியிலான சுத்தியலில் 3 முறை தட்டி அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறை பிரகாரம் போப்பினுடைய அவருடைய மோதிரமும், உத்தியோகப்பூர்வமான இறப்பர் முத்திரையும் சுத்தியலினால் அடித்து உடைக்கப்படும் வழக்கமுள்ளதாக கூறப்படுகின்றது.
அவரின் இறப்பு உறுதிசெய்த பிறகு அவரின் உத்தியோகப்பூர்வ அறைக்கு சீல் வைக்கப்படும் என்ற நடைமுறையும் அங்கு காணப்படுகின்றது.






3 Comments