ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் மீண்டும் தொடங்கினால், தங்களிடம் புதிய ராணுவ நடவடிக்கைகள் இருப்பதாக எச்சரித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கூறியதாவது, அமெரிக்காவின் மிரட்டல்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. தற்போதைய நிலைமை தற்காலிக அமைதியாக இருந்தாலும் போர் மீண்டும் தொடங்கினால் முன்பு பயன்படுத்தப்படாத புதிய திட்டங்களை களத்தில் வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






3 Comments