ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கிடையேயான முக்கிய எல்லைச் சாவடி நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ரபியா–யருபியா (Rabia–Yarubiyah) எனப்படும் இந்த எல்லைச் சாவடி 2011 ஆம் ஆண்டு சிரியாவில் தொடங்கிய உள்நாட்டு போர் காரணமாக மூடப்பட்டது. பின்னர் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்ததால் நீண்ட காலமாக செயல்படவில்லை. தற்போது அந்தப் பகுதி மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து எல்லை திறக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திறப்பின் மூலம் இராக் நாட்டின் எண்ணெய் மற்றும் பிற பொருட்கள் சிரியா வழியாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளது இது வர்த்தக போக்குவரத்துக்கு மாற்று வழியாகவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரித்து, வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.






3 Comments