வடக்கு ஜப்பானின் இவாட் (Iwate) மாகாண கடற்கரைக்கு அருகில் நேற்று மாலை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நிலநடுக்கத்தின் மையம் இவாட் கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் வடகிழக்கு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இவாட் மாகாணத்தின் குஜி துறைமுகத்தில் சுமார் 80 சென்டிமீட்டர் உயரமான சுனாமி அலைகள் பதிவாகின அதேபோல் ஹொக்கைடோ ஆமோரி மற்றும் மியாகி பகுதிகளில் 20 முதல் 40 சென்டிமீட்டர் உயர அலைகள் அவதானிக்கப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தையடுத்து சுமார் 1,72,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் மேலும் சுமார் 100 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொக்கைடோ முதல் சிபா (Chiba) மாகாணம் வரையிலான 182 நகராட்சிகளுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த எச்சரிக்கை ஏப்ரல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது புகுஷிமா மற்றும் ஒனாகவா அணுமின் நிலையங்களில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.






3 Comments