Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஈரான் நோக்கங்களுக்கு இடமில்லை இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி எச்சரிக்கை !

இஸ்ரேல் தனது நோக்கங்களை அடைய ஈரான் ஒருபோதும் அனுமதிக்காது என இஸ்ரேலிய இராணுவத் தலைமைத் தளபதி ஐயல் ஜமீர் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் பேசிய அவர், இஸ்ரேலை அழிக்க முயற்சி செய்து வரும் ஈரானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவில் தீவிரமான இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், லெபனானில் புதிய பாதுகாப்பு சூழலை உருவாக்கும் நோக்கில் இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகவும், இது வடக்கு பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய வான் படை முழுமையாக தயார் நிலையில் உள்ளதுடன் இலக்குகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேவையான நேரத்தில் உடனடியாக தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

ஈரான் மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் பின்னணியில், இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...