ஈரான் நாட்டில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான போர் பதற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில், அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படைகள் மேற்கொண்ட தாக்குதல்களில், ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர், ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், தற்போது தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த போர் சூழ்நிலையால் இதுவரை ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,375 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சட்ட மருத்துவ அமைப்பின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெதி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்கள், 496 பேர் பெண்கள் மற்றும் 383 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், 4 பேரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதேவேளை, ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவீச்சுகளின் பின்னணியில், உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் படையினர் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.






3 Comments