விண்வெளியின் ஆழத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட அபூர்வமான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாசா மேற்கொண்ட ஆர்ட்டெமிஸ் 2 விண்வெளிப் பயணத்தின் போது, விண்வெளி வீரர் ரீட் வைஸ்மேன் நிலவின் விளிம்பிற்குப் பின்னால் பூமி மெதுவாக மறையும் அரிய காட்சியை பதிவு செய்துள்ளார்.
சிறப்பம்சமாக, இந்தக் காணொளி உயர்தர கேமராக்கள் மூலம் அல்லாமல், சாதாரண கைப்பேசி ஒன்றைப் பயன்படுத்தியே பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரியன் விண்கலத்தின் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட இந்தப் பதிவு எந்தத் திருத்தமும் செய்யப்படாத மூலக் காணொளியாகும்.
இந்த அனுபவத்தை விவரித்த ரீட் வைஸ்மேன், இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய தருணம் என்றும், பிரபஞ்சத்தின் ஓரிடத்தில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை ரசிப்பதைப் போன்ற உணர்வை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி, விண்வெளி ஆராய்ச்சியின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துவதோடு, பொதுமக்களிடையே பெரும் கவனத்தையும் ஈர்ப்பையும் பெற்றுள்ளது.






3 Comments