அமெரிக்கா, ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை காலவரையறை இன்றி நிறுத்தி, போர்நிறுத்தத்தை நீட்டித்துள்ளது. ஈரான் தரப்பில் இருந்து ஒருங்கிணைந்த முன்மொழிவு முன்வைக்கப்படும் வரை இந்த முடிவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தனது தனிப்பட்ட சார்பிலும், பாகிஸ்தான் இராணுவ தளபதி சயீத் அசிம் முனீர் அவர்களின் சார்பிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
“நடந்து கொண்டிருக்கும் தூதரக முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னேறுவதற்காக, போர்நிறுத்தத்தை நீட்டிக்க எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மோதலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பும் போர்நிறுத்தத்தை கடைப்பிடித்து, இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.






3 Comments