இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் நிலை மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை தொடர்ச்சியான பகைமை நடவடிக்கையாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் அப்பாஸ் அஸ்லானி இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த நீடிப்பு குறித்து ஈரான் இதுவரை எந்த உத்தியோகபூர்வ பதிலும் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகை அமலில் இருக்கும் வரை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாது என்பது தெளிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தி இந்த கடற்படை முற்றுகையை உடைக்க ஈரான் முயற்சிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பலுக்கு பதிலடியாக ஈரான் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும், இது பிராந்திய பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் கடற்படை முற்றுகை போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஈரான் தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள், அமைதிப் பேச்சுவார்த்தை செயல்முறையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகவும் அஸ்லானி தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments