அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரான் மீதான இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிக்கவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்றே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசாங்கம் தற்போது பிளவுபட்ட நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அந்நாட்டின் தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் முன்மொழிவு ஒன்றை கொண்டு வரும்வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது “Truth Social” தளத்தில் வெளியிட்ட பதிவில் ஈரான் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் வரை தாக்குதலை நிறுத்தி வைக்கிறோம். இருப்பினும் இராணுவ முற்றுகை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் தனது தரப்பு முன்மொழிவை சமர்ப்பித்து பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறும் வரை போர்நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பின் மூலம், இன்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த போர்நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments