Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு பதற்றம் மேலும் தீவிரம் !

இரான் துணை இராணுவ புரட்சிகர காவல்படை ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஒரு கொள்கலன் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பிரிட்டிஷ் இராணுவத்தின் United Kingdom Maritime Trade Operations மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதல் காலை 7:55 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒரு காவல் துப்பாக்கிப் படகு கப்பலை எச்சரித்த பின்னர்அதனை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது இந்த சம்பவம் குறித்து Fars News Agency மற்றும் Tasnim News Agency ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் 20% பரிமாற்றம் நடைபெறும் முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில், தங்களது கட்டுப்பாட்டை சட்டபூர்வமாக செயல்படுத்துகின்றோம்” என ஈரான் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, இந்த நீரிணை ஓமன் மற்றும் ஈரான் கடற்பரப்புகளுக்குள் இருந்தாலும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான முக்கிய நீர்வழிப்பாதையாக கருதப்படுகிறது.

இந்த சம்பவம் அண்மையில் அமெரிக்கா இராணுவம் ஒரு ஈரானிய கப்பலை கைப்பற்றியதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...