இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பின்பற்றப்பட்ட அமைதி கொள்கையில் பெரிய மாற்றமாக, ஜப்பான் அரசு தனது நீண்டகால ஆயுத ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட இந்த தீர்மானம், சீனா மற்றும் வட கொரியாவால் உருவாகும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் பின்னணியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியின் தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை அங்கீகரித்துள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் மூலம், அடுத்த தலைமுறை போர் விமானங்கள், அதிநவீன ட்ரோன்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் உள்ளிட்ட மேம்பட்ட இராணுவ உபகரணங்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய ஜப்பானுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இதற்கு முன்பு, கண்ணிவெடிகள் அகற்றுதல், கண்காணிப்பு, போக்குவரத்து மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் போன்ற வரையறுக்கப்பட்ட துறைகளுக்கே ஜப்பான் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.






3 Comments