ஈரானில் எதிர்கால இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முன் நாடாளுமன்றத்தின் அனுமதி கட்டாயம் வேண்டும் என்ற மசோதா, அமெரிக்க செனட்டில் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. இந்த ஆண்டு இது ஐந்தாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
மசோதா 46–51 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறவில்லை. இதில் கட்சி வரம்பை மீறிய வாக்குப்பதிவும் நடைபெற்றது.
அமெரிக்க செனட்டில் இந்த விவகாரம் குறித்து கடும் அரசியல் மோதல் நிலவுகிறது. ஜனநாயகக் கட்சி தலைவர் சக் ஷூமர், இதுபோன்ற வாக்கெடுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்க பாதுகாப்புத்துறையில் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. கடற்படை செயலாளர் ஜான் பெலன் பதவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக துணைச் செயலாளர் ஹங் காவோ தற்காலிக பொறுப்பை ஏற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்க இராணுவ உயர்மட்டத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் நடைபெறுவது, அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.






3 Comments