தெற்கு லெபனானில் நடந்த இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர் அமல் கலீல் உயிரிழந்துள்ளார். அவருடன் இருந்த புகைப்படக் கலைஞர் ஜைனப் ஃபராஜ் காயமடைந்துள்ளார்.
Lebanon அரசின் தகவலின்படி, அவர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அருகிலுள்ள வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட தொடர்ச்சியான தாக்குதலிலும் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகக் கடுமையான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
லெபனான் பிரதமர் நவாப் சலாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை குறிவைப்பது போர்க் குற்றம் என அவர் கூறியுள்ளார். மேலும் இது தனிப்பட்ட சம்பவம் அல்ல, தொடர்ச்சியான ஒரு முறைமைப்பட்ட நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் இந்த விவகாரத்தை சர்வதேச அமைப்புகளுக்கு கொண்டு செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு இரங்கலும், காயமடைந்தவர் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் இஸ்ரேல்–லெபனான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






3 Comments