ஆசிய கடல் எல்லைகளில் குறைந்தது மூன்று ஈரான் கொடி கொண்ட எண்ணெய் டேங்கர்கள் அமெரிக்க இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் பயண பாதையிலிருந்து திருப்பி விடப்பட்டதாக கப்பல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கப்பல்கள் இந்தியா, மலேசியா மற்றும் இலங்கைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இயங்கிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை தடுக்கும் வகையில் கடல் வழி கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் பல ஈரான் எண்ணெய் டேங்கர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சில கப்பல்கள் அமெரிக்க கடற்படை கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
United States மத்திய கட்டளை அமைப்பு, கடந்த நாட்களில் பல கப்பல்கள் துறைமுகத்திற்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், பெரும்பாலானவை எண்ணெய் டேங்கர்கள் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், Iran மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து வருவதாகவும், போர் நிறுத்தம் இருந்தபோதிலும் கடல் பகுதியில் கட்டுப்பாடுகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு வட்டாரங்கள், இந்த நடவடிக்கைகள் ஹோர்முஸ் நீரிணை அருகே பெரிய அளவிலான மோதலைத் தவிர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கின்றன.






3 Comments