Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

இங்கிலாந்து பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி தடை !

இங்கிலாந்து அரசாங்கம் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டைத் தடை செய்யும் நடைமுறையை சட்டபூர்வமாக்க தீர்மானித்துள்ளது.

சிறுவர் நலன்புரி மற்றும் பாடசாலைகள் சட்டமூலம் மூலம் இதுவரை வழிகாட்டியாக மட்டுமே இருந்த இந்த கட்டுப்பாட்டை சட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை பல பாடசாலைகள் தங்களாகவே தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் இது நாடு முழுவதும் ஒரே சட்ட கட்டமைப்பாக அமைய உள்ளது.

கல்வி அமைச்சர் ஜாக்கி ஸ்மித் இந்த நடவடிக்கை பாடசாலை தலைவர்களுக்கு தெளிவான சட்ட ஆதரவு வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களை கண்காணிக்க புதிய பதிவேடு முறை மற்றும் அவர்களின் நலனை கண்காணிக்க தனித்துவ அடையாள முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த முடிவை சில கல்வி நிர்வாகிகள் வரவேற்றுள்ள நிலையில் சிலர் மாணவர்களின் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வசதிகளுக்கும் அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மொத்தத்தில் வகுப்பறைகளில் கவனம் சிதறலைக் குறைத்து கற்றல் சூழலை மேம்படுத்துவதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...