சீன மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், ஜெர்மனியின் வோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் ஒத்துழைப்பை அதிகரிக்க “மிகப்பெரிய சாத்தியம்” இருப்பதாக தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பிரதிநிதி கு, இரு நிறுவனங்களும் இணைந்து மதிப்பை உருவாக்கக்கூடிய பல துறைகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், எக்ஸ்பெங் நிறுவனம் உலகின் பல பிராந்தியங்களில் உள்ள வாகன உற்பத்தியாளர்களுடன் கூட்டாண்மை மேற்கொள்ளவும் திறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் பறக்கும் கார்கள் தொடர்பாக 7,000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சீனாவில் இருந்து வந்துள்ளன. தற்போது, அந்த வாகனங்களுக்கு சீன விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் அனுமதி பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், எக்ஸ்பெங் நிறுவனம் இந்த ஆண்டில் தெற்கு சீன நகரமான குவாங்சோவில் ரோபோடாக்ஸி சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு உலகளாவிய அளவில் கூட்டாளர்களுடன் சோதனைகளை விரிவுபடுத்தும் முக்கிய ஆண்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 முதல் 18 மாதங்களில் நூற்றுக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கான ரோபோடாக்ஸிகளை உற்பத்தி செய்யும் இலக்கையும் நிறுவனம் வைத்துள்ளது.
இதற்குடன், மனித வடிவ ரோபோக்கள் ஆரம்பத்தில் வரவேற்பாளர்களாகவும் வாடிக்கையாளர் சேவைகளிலும் பயன்படுத்தப்பட உள்ளன. எதிர்வரும் 10 முதல் 20 ஆண்டுகளில், இந்த ரோபோ வணிகம் வாகனத் துறையை விட பெரியதாக வளரும் எனவும் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
சீனாவுக்கு வெளியே விரிவடைந்து வரும் எக்ஸ்பெங் நிறுவனம் தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் அதன் விற்பனையின் 10% மற்றும் வருவாயின் 15% வெளிநாடுகளில் இருந்து கிடைத்துள்ளது.
எதிர்வரும் 5 முதல் 10 ஆண்டுகளில், மொத்த வருவாயில் 50% க்கும் அதிகமானவை வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் என நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.






3 Comments