அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக Iran மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை பேச்சாளர் கரோலின் லெவிட் கூறுகையில், இந்த முற்றுகையால் ஈரானுக்கு நாளொன்றுக்கு சுமார் 500 மில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, Kharg Island என்ற முக்கிய எண்ணெய் முனையம் வழியாக எண்ணெய் ஏற்றுமதி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார அழுத்தத்தால், அரசாங்க ஊழியர்களுக்குக் கூட சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
Donald Trump தலைமையிலான நிர்வாகம், “Operation Epic Fury” நடவடிக்கையின் பின்னர் ஈரானுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தற்காலிகமாக நீடிக்கப்பட்டாலும், பொருளாதார அழுத்தம் தொடர்ந்து இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் அரசியல் அமைப்புக்குள் நடைமுறைவாதிகள் மற்றும் கடும்போக்காளர்கள் இடையே அதிகாரப் போட்டி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஈரானிடமிருந்து தெளிவான பதிலை எதிர்பார்த்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.






3 Comments