உலகக்கிண்ணக் கால்பந்து தொடரில் இருந்து ஈரானிய வீரர்களை வெளியேற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது என்ற தகவல்களை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ மறுத்துள்ளார்.
ஈரானிய கால்பந்து அணி உலகக்கிண்ணத்தில் பங்கேற்க விடாமல் அமெரிக்கா தடை செய்கிறது என்ற சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், உலகக்கிண்ணத்திற்குத் தகுதி பெறத் தவறிய இத்தாலியை ஈரானுக்குப் பதிலாக இணைக்கலாம் என்ற கருத்தையும் ரூபியோ நிராகரித்துள்ளார்.
பிரச்சினை ஈரானிய வீரர்களுடன் இல்லை அவர்களுடன் வரக்கூடிய ஏனைய நபர்கள் குறித்தே எமக்கு கவலை உள்ளது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஈரானிய அதிகாரிகளுக்கு விசா வழங்குவதில் உள்ள சிக்கல்களை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் அணி உலகக்கிண்ணத்தில் பங்கேற்கக் கூடாது என அமெரிக்கா எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும் மார்கோ ரூபியோ உறுதிப்படுத்தியுள்ளார்.






3 Comments