அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தை நிலவரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அமெரிக்கர்கள் எரிபொருளுக்காக அதிக பணம் செலவிட வேண்டியிருக்குமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அவர் நேரடி பதிலை வழங்கவில்லை.
அதற்கு பதிலாக, “இதற்குப் பதிலாக மக்களுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா? எமது நகரங்களையோ அல்லது மத்திய கிழக்கையோ தகர்க்க முயலும் அணு ஆயுதங்கள் இல்லாத ஈரான் தான் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த சில தியாகங்கள் அவசியம் என்பதையும் அவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
எண்ணெய் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 200 டொலர் வரை உயரும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிலான விலையில் உள்ளது என்றார்.
மேலும், அமெரிக்காவின் தற்போதைய நிலை திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில், நமது நாட்டில் எண்ணெய் விலை பிற நாடுகளை விட குறைவாக உள்ளது. ஏனெனில் நமக்குத் தேவையான எண்ணெய் வளங்கள் நம்மிடமே உள்ளன எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அத்துடன், அமெரிக்காவில் இருந்து எண்ணெயைப் பெறுவதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து கப்பல்கள் தற்போது அமெரிக்காவை நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் எரிசக்தி தன்னிறைவு மற்றும் ஈரான் மீதான கடுமையான நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் அமைந்துள்ளன.






3 Comments