Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

சோமாலியாவில் கடும் வறட்சி !

காலநிலை மாற்றம் மற்றும் தொடர்ச்சியான உள்நாட்டு மோதல்களின் தாக்கத்தால் சோமாலியாவில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடும் பஞ்சத்தை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியான 6.5 மில்லியன் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுமார் 2 மில்லியன் மக்கள் உயிருக்கு ஆபத்தான மிக மோசமான பசி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், உணவுத் தட்டுப்பாட்டினால் சுமார் 1.8 மில்லியன் சிறுவர்கள் கடுமையான மந்தபோஷண அபாயத்தில் உள்ளனர். இவர்களில் அரை மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் உடனடி சிகிச்சை தேவைப்படும் மிக தீவிர நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மந்தபோஷணத்தால் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

தொடர்ச்சியாக நான்கு பருவங்களாக மழை வீழ்ச்சி இல்லாததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் குடிநீர் ஆதாரங்கள் வற்றிப்போனதோடு, மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால் இலட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

சோமாலியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பில் சார்ந்துள்ளதால், இந்த நிலைமை அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

அத்துடன், உள்நாட்டு மோதல்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், எரிபொருள் மற்றும் உணவு இறக்குமதி செலவுகள் 100 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து, கால்நடை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாடுகள் மற்றும் மனிதநேய அமைப்புகள் உடனடியாக உதவிகளை வழங்காவிட்டால், எதிர்வரும் மாதங்களில் சோமாலியாவில் பாரிய மனிதாபிமான பேரழிவு உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...