ஜப்பான் தனது போருக்குப் பிந்தைய பாதுகாப்பு கொள்கையில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு, தென்மேற்கு பிராந்தியங்களில் இராணுவத் தயாரிப்புகளை வலுப்படுத்தி வருகிறது.
கியூஷு தீவு, அதன் எரிமலை நிலப்பரப்பு மற்றும் சுற்றுலா முக்கியத்துவத்திற்காக அறியப்பட்டாலும், தற்போது ஜப்பானின் புதிய பாதுகாப்பு மூலோபாயத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
மார்ச் மாதத்தில், குமாமோட்டோ மாகாணம் தென்மேற்கு கடற்கரையில் ஜப்பான் நீண்ட தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் சீனாவைத் தாக்கக்கூடியவையாக இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
2019 முதல், வட கொரியா மற்றும் ரஷ்யாவை விட சீனா ஜப்பானின் முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்படுகின்றது.
இந்த நிலையில், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, “போருக்குப் பிந்தைய காலத்தில் ஜப்பான் மிகவும் சிக்கலான பாதுகாப்பு சூழ்நிலையை எதிர்கொள்கிறது” என்றும், நாட்டின் தடுப்பு மற்றும் பதிலடி திறன்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
“தெற்கு கேடயம்” என அழைக்கப்படும் புதிய பாதுகாப்பு மூலோபாயத்தின் கீழ், ஜப்பான் தற்காப்புப் படைகள் தெற்கு ஜப்பான் மற்றும் அதன் தென்மேற்கு தீவுகளில் ஆயுத தளங்கள், மின்னணு போர் அமைப்புகள் மற்றும் வான்படை வளங்களை அதிகரித்துள்ளது.
இதனால், ஜப்பானின் பாதுகாப்பு கவனம் வடக்கு பிராந்தியங்களிலிருந்து தென்மேற்கு நோக்கி மாறி வருவதாக பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.






3 Comments