ஈரானுடன் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், போர்நிறுத்த முயற்சிகளை வலுப்படுத்தவும், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தலைமையிலான நிர்வாகம் முக்கிய தூதரக நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ட்ரம்ப்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் அவரது மருமகனும் மூத்த ஆலோசகருமான Jared Kushner ஆகியோர் பாகிஸ்தான் தலைநகர் Islamabad நகரத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
அங்கு, அவர்கள் ஈரானின் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchiயை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளனர். அராக்சி ஏற்கனவே இஸ்லாமாபாத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முயற்சி குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் விளக்கமளிக்கையில், “ஈரானிய தரப்பு நேரடி பேச்சுவார்த்தையை விரும்பியுள்ளதால், அதற்கு ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்தத் தூதுக்குழு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ராஜதந்திரத்திற்கு எப்போதும் ஒரு வாய்ப்பை வழங்க ஜனாதிபதி தயாராக உள்ளார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தேவையெனில் அமெரிக்க துணை ஜனாதிபதியையும் பாகிஸ்தானுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.






3 Comments