Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

காஸாவில் போர் தாக்கம் பேசும் திறனை இழக்கும் சிறுவர்கள் !

காஸா பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதல்கள், அப்பகுதி சிறுவர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

மதிப்பீடுகளின்படி, சுமார் 11 இலட்சம் சிறுவர்கள் உளவியல் ரீதியான ஆதரவைத் தேவைப்படும் நிலையில் உள்ளனர். குண்டுவீச்சுகள் மற்றும் வெடிப்புகளால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் தலையில் ஏற்படும் காயங்கள் காரணமாக, பலர் பேசும் திறனை இழந்து “மௌனமான அவதி” எனப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஐந்து வயதான ஜாத் சொஹுத், தனது வீட்டின் அருகே நிகழ்ந்த வெடிப்பின் அதிர்ச்சியால் முழுமையாகக் குரல் எழுப்பும் திறனை இழந்துள்ளார். அதேபோல், நான்கு வயது லூசின் தம்போரா, வான்வழித் தாக்குதலால் சேதமடைந்த கட்டிடத்திலிருந்து விழுந்ததில் ஏற்பட்ட நரம்பியல் பாதிப்பினால் தற்போது பேச முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Médecins Sans Frontières (எல்லைகளற்ற மருத்துவர்கள்) அமைப்பைச் சேர்ந்த உளவியல் நிபுணர் காத்ரின் கிளாட்ஸ் புருபாக், இந்த நிலையை “அறிவாற்றல் போர் காயங்கள்” என விவரிக்கிறார்.

தொடர்ச்சியான வன்முறையை எதிர்கொள்ளும் சிறுவர்களின் மூளை “தற்காப்பு நிலைக்கு” மாறுவதால், அவர்கள் வெளிப்புற உலகுடன் தொடர்பு கொள்ளாமல் மௌனமாகும் நிலை உருவாகிறது.

Gaza Cityயிலுள்ள ஹமட் வைத்தியசாலையின் பேச்சு சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் மூசா அல்-கோர்டி, “தேர்வு சார்ந்த ஊமைத்தன்மை” மற்றும் அதிர்ச்சியால் ஏற்படும் குரல் இழப்பு சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார்.

மருந்து பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் போன்ற சவால்கள் மத்தியில் கூட, மருத்துவர்கள் “நம்பிக்கைக் குமிழிகள்” போன்ற எளிய சிகிச்சை முறைகளை பயன்படுத்தி குழந்தைகளை மீண்டும் பேச வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலைமை, காஸாவில் தொடரும் மோதலின் மனிதாபிமான விளைவுகளை வெளிப்படுத்தும் மிகக் கவலைக்கிடமான ஒரு உண்மையாகக் கருதப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...