அமெரிக்கா மற்றும் ஈரான் வணிகக் கப்பல்களை கைப்பற்றியுள்ளமைக்கு சர்வதேச கப்பல் துறையிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது.
சர்வதேச கப்பல் சபை இந்த நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததுடன், கைப்பற்றப்பட்ட கப்பல்களில் உள்ள மாலுமிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
அல் ஜசீரா வழங்கிய நேர்காணலில், அந்த அமைப்பின் கடல்சார் இயக்குனர் ஜான் ஸ்டோஹெர்ட் மாலுமிகள் தங்கள் தொழிலை சுதந்திரமாகவும் எந்தத் துன்புறுத்தலும் இன்றி மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் ஏற்கனவே பதற்றம் நிலவும் கடல்சார் பாதைகளில் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
சர்வதேச வர்த்தகத்திற்கும் கடல்சார் போக்குவரத்திற்கும் முக்கியமான பாதைகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவது உலகளாவிய பொருளாதாரத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.






3 Comments