இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களைச் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.
பாஜகவில் இணைந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக தனது நிலைப்பாட்டை விளக்குவதற்காக, பஞ்சாப் எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து இந்தச் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ராஜீந்தர் குப்தா, சுவாதி மாலிவால் மற்றும் விக்ரம்ஜித் சாஹ்னி ஆகியோர் கட்சியை விட்டு விலகி, பாரதீய ஜனதா கட்சியில் இணைவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அரசியல் நிலைமை உருவாகியுள்ளது.
இந்த எம்.பி.க்களின் கட்சித் தாவல் பிரச்சினையை முதல்வர் மான் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் வெளியேறியுள்ளதால், அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் கீழ் உள்ள கட்சித் தாவல் எதிர்ப்பு சட்டம் இவர்களுக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம், இந்திய அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், எதிர்கால அரசியல் நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.






3 Comments