ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தனது நூற்றாண்டு ஆண்டை மேற்கத்திய நாடுகளை சென்றடைவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி வருவதாக அதன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய தூதுக்குழுவின் ஒரு பகுதியாக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்தியா குறித்து வெளிநாடுகளில் பரவி வரும் “தீங்கிழைக்கும் பிரச்சாரம்” மற்றும் நீண்டகால தவறான கருத்துக்களை எதிர்கொள்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறினார்.
India Today நடத்திய நேர்காணலில் அவர் தெரிவித்ததாவது, சமீபத்திய உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச அளவில் உருவாகும் கருத்து சூழல் காரணமாக, அமைப்பு தனது நிலைப்பாட்டை மேலும் தெளிவாகவும் சுறுசுறுப்பாகவும் முன்வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சமீப காலங்களில் சங்கம் குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்துள்ளன. பாகிஸ்தான் ஜனாதிபதி கூட ஐக்கிய நாடுகள் சபை மேடையில் சங்கத்தை குறிப்பிட்டுள்ளார் என அவர் கூறினார்.
சங்கத்தின் உண்மை நிலைப்பாடுகளையும் அதன் பணிகளையும் உலகிற்கு விளக்குவதற்கும், தற்போது பரவி வரும் எதிர்மறை கருத்துக்களுக்கு பதிலளிப்பதற்கும் இது சரியான நேரமாகும்” எனவும் ஹோசபலே குறிப்பிட்டார்.
இந்த முயற்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்வதேசத் தொடர்புகளை விரிவுபடுத்தும் புதிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.






3 Comments