தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிரப் பிரசாரப் பணிகளை நிறைவு செய்த பின்னர், ஓய்வெடுப்பதற்காக மு.க. ஸ்டாலின் இன்று கொடைக்கானல் சென்றடைந்தார்.
திராவிட முன்னேற்ற கழகம் தலைவருமான அவர், கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு, கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் பரபரப்பிலிருந்து ஓய்வெடுக்க அவர் இன்று சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய “வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தனது கட்டைவிரலை உயர்த்தி “சூப்பராக உள்ளது, வெற்றி வாய்ப்பு எங்களுக்கே” என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பின்னர் அவர் வாகனத்தில் கொடைக்கானலுக்கு புறப்பட்டுச் சென்றார். தேர்தல் முடிவுகளை முன்னிட்டு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முதல்வரின் இந்த நம்பிக்கை கருத்து கவனம் ஈர்த்துள்ளது.






3 Comments