மத்திய கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஈரானின் அணுகுமுறையில் திருப்தியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடன் தொடர்புடைய பயணங்களை அமெரிக்கா ரத்து செய்துவிட்டதாக அவர் தெரிவித்தார். நீண்ட நேர விமானப் பயணங்களை மேற்கொண்டு, எதிர்பார்த்த முடிவுகள் இல்லாத ஆவணங்களைப் பெறுவதற்காக நேரத்தை வீணடிக்க முடியாது என்றும் கூறினார்.
மேலும், ஈரானில் தெளிவான தலைமைத்துவம் இல்லை எனவும், யார் முடிவெடுக்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.
இதனால், இனி நேரடி சந்திப்புகள் இல்லாமல், தொலைபேசி மூலமாகவே தொடர்புகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும், ஈரான் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம் என்றும் Donald Trump தெரிவித்துள்ளார்.






3 Comments