ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஓமான் மற்றும் ரஷ்யாவிற்கான பயணங்களுக்கு இடையில் மீண்டும் பாகிஸ்தான் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிய ஊடகம் ‘மெஹ்’ வெளியிட்ட தகவலின்படி, அவர் ஓமான் பயணத்தை முடித்த பிறகு ரஷ்யாவுக்கு செல்லும் முன் இடைத்தங்கலாக இஸ்லாமாபாத் வருவார் என தெரிவிக்கப்படுகிறது.
அவருடன் சென்ற தூதுக்குழுவின் ஒரு பகுதி போர் நிறுத்தம் தொடர்பான மேலதிக ஆலோசனைகளுக்காக தெஹ்ரானுக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனான பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றம் எதுவும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், அமெரிக்கா தூதுக்குழு பயணம் ரத்து செய்ததால் இந்த அமைதி முயற்சிகள் சிக்கலடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் நிலையில், அரக்சியின் மீள்பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது.






3 Comments