டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை நிகழ்வில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றபோதிலும் மன்னர் சார்லஸ் அவர்களின் அமெரிக்க அரசுப் பயணம் திட்டமிட்டபடி தொடரும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
சார்லஸ் மற்றும் ராணி கமிலா நான்கு நாள் அரசு விஜயத்திற்காக திங்களன்று அமெரிக்கா வரவுள்ளனர் பாதுகாப்பு சம்பவத்துக்குப் பிறகும் பயணம் தொடருவதில் மாற்றமில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க நிகழ்வின் அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை அவசரமாக அங்கிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் ஜனாதிபதி மற்றும் நிர்வாக அதிகாரிகளை குறிவைத்து இருக்கக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் வரவிருக்கும் இந்த அரசு விஜயம் அமெரிக்கா–பிரிட்டன் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறவுள்ளதாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






3 Comments