கொலம்பியாவில் பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு காகா பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் வாகனங்கள் சேதமடைந்து, சாலையில் பெரிய அளவில் குப்பைகள் சிதறியதாக காணொளிகளில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, முன்னாள் FARC பிரிவுகளுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
காகா ஆளுநர் ஆக்டேவியோ குஸ்மான் இதை பல தசாப்தங்களில் பொதுமக்களுக்கு எதிரான மிகக் கொடூரமான தாக்குதலாக வர்ணித்துள்ளார்.
அதிகாரிகள் கூறுகையில், தாக்குதலுக்குப் பின்னால் போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் மற்றும் ஆயுதக் குழுக்கள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
மே 31 தேர்தலுக்கு முன்பாக இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதால், நாட்டின் பாதுகாப்பு நிலைமை மேலும் கவலைக்கிடமாகியுள்ளது.






3 Comments