இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாஹர் மாவட்டம், குர்ஜா நகரில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு துயர சம்பவமாக முடிந்துள்ளது.
ஜீது சைனி தனது பிறந்தநாளை ஜிம் ஒன்றில் கொண்டாடியபோது, நண்பர்கள் விளையாட்டாக அவரது முகத்தில் கேக் பூசியது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. அதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்து வெளியேறி, பின்னர் ஆயுதங்களுடன் திரும்பி வந்து நண்பர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் அமர்தீப் சைனி, மனீஷ் சைனி, ஆகாஷ் சைனி ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளது. இது திட்டமிட்ட கொலை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.






3 Comments