வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தியதாகக் கூறப்படும் சுமார் 14 கிலோமீட்டர் நீளமான நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பை தங்களது படைகள் அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பீத் ஹனூன் (Beit Hanoun) பகுதியை மையமாகக் கொண்டு கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இந்த சுரங்கங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாக IDF கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையில் யஹாலம் (Yahalam) எனப்படும் சிறப்பு பொறியியல் பிரிவும் இணைந்து செயல்பட்டதாகவும் சுரங்கங்களுக்குள் ஆயுதங்கள் மற்றும் தங்கும் அறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் சுமார் 70 போராளிகள் அண்மைய மாதங்களில் கொல்லப்பட்டதாகவும் IDF தெரிவித்துள்ளது.






3 Comments